செல்லப் பிராணியுடன் வாக்கிங் போனாலும் கொரோனா வருமா??? பரபரப்பை கிளப்பும் புதுத் தகவல்!!!

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

 

கீரியிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில் தற்போது நாயுடன் வாக்கிங் செல்பர்வகளுக்கு 78% கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஸ்பெயின் விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சித் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்றாது. அதன் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் சீனாவில் நடத்திய ஒரு ஆய்வைக் குறித்து சில பரபரப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளனர். அதில் தங்களுடைய செல்லப் பிராணிகளைக் கூட்டிக்கொண்டு பெரும்பாலான மக்கள் வாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருக்கின்றனர். அப்படி நாயைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் செல்லும்போது அழுக்குப் படிந்த சாலை, தெருக்களில் ஒட்டி இருக்கும் கொரோனா வைரஸ் நாயின் மேற்பரப்பில் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் நாயிடம் இருந்து அதன் உரிமையாளர்களுக்கு எளிதாக கொரோனா வைரஸ் பரவி விடுகிறது. எனவே தங்களுடைய செல்ல பிராணிகளான நாயை வாக்கிங் கூட்டிச் செல்லும்போது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஷாப்பிங் கூட செல்லாமல் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. அப்படி நேரடியாக ஷாப்பிங் சென்று பொருட்களை வாங்குவோரை விட ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவோருக்கு 94% கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் அந்த விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். இந்தத் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளதால் மீண்டும் அலுவலகம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வீடுகளில் இருந்து பணியாற்றுவோரை விட அலுவலகம் சென்று பணியாற்றும் 76% ஊழியர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிகரித்து இருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டு இருக்கிறது.

More News

எம்ஜிஆர், சிவாஜியை தோற்கடித்த ஹவுஸ்மேட்ஸ்: பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கடந்த சில நாட்களாக சவாலான டாஸ்குகள் கொடுக்கப்படுகின்றன என்பதும் அந்த டாஸ்குகள் நிகழ்ச்சியை சுவராசியமாக மாற்றுகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம் 

தமிழகத்தில் பருவமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படுவதாக அமைச்சர் பேட்டி!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை

தல அஜித்தின் 'வலிமை' அப்டேட்: எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம் 

புதையலுக்கு ஆசைப்பட்டு பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்க துணிந்த சம்பவம்…

அசாம் மாநிலத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு, பெற்ற பிள்ளைகளையே பலி கொடுக்க துணிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை கெளதமி வீட்டுக்குள் சுவரேறி குதித்த இளைஞரால் பரபரப்பு!

நடிகை கெளதமி வீட்டில் திடீரென இளைஞர் ஒருவர் குடிபோதையில் சுவரேறி குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது