மாதிரி சவப்பெட்டியில் அடைத்து தண்டனை… இத்தனை கொடூரம் எதற்கு தெரியுமா?
- IndiaGlitz, [Friday,September 04 2020]
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்றவை மட்டுமே இதுவரை தீர்வாகக் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகள் பெரும்பாலான நாடுகளில் தளர்த்தப்பட்டு விட்டன. இதனால் கொரோனா நோய்த்தொற்றைப் பற்றிய அக்கறையே இல்லாமல் மக்கள் வெளியிடங்களில் நடமாடவும் தொடங்கிவிட்டனர். இத்தகைய நடவடிக்கைகளை உலகச் சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்டித்து வருகிறது.
இந்நிலையில் பெரும்பாலான நாடுகள் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் கடுமையான தண்டனை மற்றும் அபராதத்தை விதித்து வருகின்றன. இந்தோனேசியா அரசு இன்னும் ஒருபடி மேலே போய் முகக்கவசம் அணியாத நபர் ஒருவருக்கு ஒரு வினோதமான தண்டனையை வழங்கி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தோனேசியா தலைநகர் ஜார்ஜியாவில் முகக்கவசம் அணியாத ஒருநபருக்கு மாதிரி சவப்பெட்டியை ஏற்பாடு செய்து அதில் அவர் அடக்கம் செய்யப்படுவதைப் போல தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்களுக்கு அச்சம் மற்றும் பாதுகாப்பு உணர்வு ஏற்படும் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.