பெண்களை இழிவுபடுத்தும் திமுக-விற்கு மக்கள் பாடம் கற்றுத்தாருங்கள்...! ராஜ்நாத் சிங் காட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்களை இழிவுபடுத்தி பேசும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, பொதுமக்களாகிய நீங்கள் சரியான பாடத்தை கற்றுத்தரவேண்டும் என்று இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஊட்டியில் பாஜக சார்பாக களமிறங்கும் வேட்பாளரான, போஜராஜன் அவர்களை ஆதரித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் ஊட்டி ஏ.டி.சி-யில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
" மத்திய அரசு எடுத்த துரித முடிவுகள் தான், மக்கள் கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வர உதவியாக இருந்தது. இந்தியாவிலிருந்து சுமார் 72 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.பாஜக-அதிமுக கூட்டணியின் காரணமாகத்தான் தமிழகம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
திமுக ராசா, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதை வன்மையான கண்டிக்கிறேன். மக்கள் அவர்களுளை தோற்கடித்து பாடம் புகட்டுங்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் மூடப்பட்டிருக்கும் எச்.பி.எப்.. தொழிற்சாலையில் ஐ.டி.பார்க் உருவாக்கப்பட்டு, சுமார் ஐம்பது லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். குடிசைகள் இல்லாமல் கான்கிரீட் வீடுகள் உருவாக்கப்படும். மேலும் தேயிலையின் குறைந்தபட்ச விலை ரூ.30-ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். படுகர் மக்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com