பெண்களை இழிவுபடுத்தும் திமுக-விற்கு மக்கள் பாடம் கற்றுத்தாருங்கள்...! ராஜ்நாத் சிங் காட்டம்..!

  • IndiaGlitz, [Wednesday,March 31 2021]

பெண்களை இழிவுபடுத்தி பேசும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, பொதுமக்களாகிய நீங்கள் சரியான பாடத்தை கற்றுத்தரவேண்டும் என்று இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஊட்டியில் பாஜக சார்பாக களமிறங்கும் வேட்பாளரான, போஜராஜன் அவர்களை ஆதரித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் ஊட்டி ஏ.டி.சி-யில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

மத்திய அரசு எடுத்த துரித முடிவுகள் தான், மக்கள் கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வர உதவியாக இருந்தது. இந்தியாவிலிருந்து சுமார் 72 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.பாஜக-அதிமுக கூட்டணியின் காரணமாகத்தான் தமிழகம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

திமுக ராசா, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதை வன்மையான கண்டிக்கிறேன். மக்கள் அவர்களுளை தோற்கடித்து பாடம் புகட்டுங்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் மூடப்பட்டிருக்கும் எச்.பி.எப்.. தொழிற்சாலையில் ஐ.டி.பார்க் உருவாக்கப்பட்டு, சுமார் ஐம்பது லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். குடிசைகள் இல்லாமல் கான்கிரீட் வீடுகள் உருவாக்கப்படும். மேலும் தேயிலையின் குறைந்தபட்ச விலை ரூ.30-ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். படுகர் மக்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

More News

99 சாங்ஸ் விழாவில் இந்தியில் பேசியது ஏன்? தொகுப்பாளினி விளக்கம்!

சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் தயாரித்து, இசை அமைத்து, கதை எழுதிய '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தூள் கிளப்பும் ஸ்ரேயா சரணின் ஹோலி டான்ஸ்: வைரல் வீடியோ

சமீபத்தில் வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடியது

'சுந்தரி' சீரியல் நடிகையின் கணவர் இந்த இளைஞரா? வைரல் புகைப்படம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் கேப்ரில்லா.

'தளபதி 65' படத்தில் கவின் நடிக்கின்றாரா? 

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான 'தளபதி 65' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் விஜய், நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

நயன்தாரா என்ன திமுக கொள்கை பரப்பு செயலாளரா? ராதாரவி கேள்வி

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு