துணி, நகைக்கடைகளில் குவியும் கூட்டம்: அரசின் தவறான முடிவு காரணமா?
- IndiaGlitz, [Sunday,May 23 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென நேற்று இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனையடுத்து நேற்றும் இன்றும் அனைத்து வாகனங்களும் இயங்கலாம் என்றும், அனைத்து கடைகளும் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
வரும் திங்கள் முதல் முழு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்களை மக்கள் வாங்கிக் கொள்ள ஏதுவாக இந்த சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த சலுகையை தவறாக பயன்படுத்தி மக்கள் தற்போது காய்கறிகள், மளிகை பொருட்கள் மட்டுமின்றி நகைகளையும் ஜவுளியையும் வாங்கிக் குவித்து வருகின்றனர். சென்னை தி நகரில் திருவிழா கூட்டம் போல் நகைக்கடை ஜவுளிக்கடைகளில் கூடியிருப்பதும் தனிமனித இடைவெளியை சுத்தமாக அவர்கள் மறந்து போனதையும் பார்க்கும்போது கொரோனாவுக்கு சரியான கொண்டாட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து திமுக ஆதரவாளர்களே கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் கடைகளை மட்டும் திறக்க அனுமதித்து இருக்கலாம் என்றும் அனைத்து கடைகளைஒயும் திறக்க அனுமதித்தது தவறான முடிவு என்றும் கூறி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நேற்றும் இன்றும் கூடிய கூட்டத்தின் விளைவு இன்னும் ஒருசில நாட்கள் கழித்து தான் தெரியும் என்று கூறப்பட்டு வருகிறது.