அதிமுக கூட்டணி அமைச்சரவையை ஒப்புக் கொள்ளுமா??? விளக்கம் அளித்த தமிழக முதல்வர்!!!

 

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த ஊரான எடப்பாடியில் கடந்த 19 ஆம் தேதி துவங்கினார். இதையடுத்து நாளை முதல் சூறாவளி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்நிலையில் அஇஅதிமுக மீது விமர்சனம் வைத்துள்ள எதிர்க் கட்சியினருக்கு இவர் தக்கப் பதிலையும் கூறி வருகிறார்.

அந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி அமைச்சரவையை ஒப்புக் கொள்ளாது. இதுவரை கூட்டணி தொடர்ந்து வருகிறது. ஆனால் ஒருபோதும் கூட்டணி அமைச்சரவையை அதிமுக ஏற்காது எனக் கூறி இருக்கிறார். இதனால் பாஜகவுடன் இருந்து வரும் கூட்டணி இதுவரை தொடருகிறது. ஆனால் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைச்சரவையோடு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்காது என விளக்கம் அளித்து உள்ளார்.

அதோடு முதல்வர் எடப்பாடியை விமர்சித்த சில எதிர்க்கட்சிகளுக்கு அவர் தொடர்ந்து தக்கப் பதிலடியையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் எல்லாம் அதிமுகவை விமர்சனம் செய்வதா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் தற்போது கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்பு திமுக ஆட்சியில் விடுபட்ட பணிகள் கூட தற்போது முடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது.

மேலும் அதிமுகவில் வாரிசு அடிப்படையிலான சிக்கல்கள் இல்லை. ஆனால் மற்ற கட்சிகளில் இந்நிலைமை இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதோடு புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் சிலர் அதிமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அரசியலும் புதுசு, மக்கள் சேவையும் புதுசு. ஆழங்கால் பட்ட அதிமுகவின் பணிகள் என்றென்றும் நின்று பேசும் என்றும் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

More News

மாஸ்டர் பட நாயகியின் மாஸ்க் சோதனை... வைரல் வீடியோ!!!

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் பல லட்சக்கணக்கான இளம் ரசிர்கர்களை கவர்ந்து விட்டார்.

ஒரு குழந்தையை மாறிமாறி விற்பனை செய்த கும்பல்… போலீசாரே மிரண்டுபோன சம்பவம்!!!

சேலம் பகுதியில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகளுக்கு தந்தையான ஆட்டோ டிரைவர் ஒருவர் 3 ஆவதாகப் பிறந்த பெண் குழந்தையை விலைக்கு விற்று இருக்கிறார்.

ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் எதுவும் இருக்கக்கூடாது… அதிரடி காட்டும் கம்யூனிச நாடு!!!

ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என அனைத்து சமூக வலைத்தளத்திற்கும் தடை விதிக்க ரஷ்யா அரசாங்கம் முடிவெடுத்து உள்ளது.

இப்ப இல்லை, எப்பவுமே இல்லை: ரஜினிகாந்த் அறிக்கை குறித்து தமிழ் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சற்றுமுன் தான் அரசியல் கட்சி தொடங்கபோவதில்லை

'மாஸ்டர்' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி: ரசிகர்கள் மகிழ்ச்சி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும்