சோசியல் டிஸ்டன்ஸ் புரியலையா..?! ஈரோடு மக்களை பாருங்கள்.
- IndiaGlitz, [Thursday,March 26 2020]
உலகம் முழுக்க 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸானது தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இப்போது வரை தொற்று ஏற்பட்டுள்ளவர்களை பிரித்து மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
முதல் கட்டமாக 21 நாட்கள் நாடு முழுவதும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமான தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வரும் மக்கள் காவல் துறையினரால் கண்டித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். நோயானது பரவாமல் தடுப்பது நம்மிடம் மட்டுமே உள்ளது. நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு சோசியல் டிஸ்டன்ஸ் என அழைக்கப்படும் சமூகத்திலிருந்து விலகியிருப்பதனை பின்னபற்ற வேண்டும்.
ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் மக்கள் எப்படி தள்ளி தள்ளி நிற்கிறார்கள் பாருங்கள். இதைத் தான் நாம் அனைவருமே பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு வெளியில் சென்றாலும் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இந்த நிலைமை மாறும். இந்த நோயை விரட்டிவிட்டு நாம் ஒருவரோடு ஒருவர் கை கொடுத்துக்கொள்ளும் காலம் வரும். அதுவரை தனித்திருந்து மற்றவர்களுக்கு உதவி செய்வோம். உடலால் பிரிந்திருந்தாலும் மனதால் இணைவோம்..!