ஜனவரி 15 முதல் 17 எங்கெல்லாம் அனுமதி கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு!
- IndiaGlitz, [Tuesday,January 12 2021]
வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள் என்பதும் இதனால் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காணும் பொங்கல் தினத்தன்று கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுவது உண்டு
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஜனவரி 15 முதல் 17-ம் தேதி வரை அனுமதி கிடையாது என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. அதேபோல் வண்டலூர், கிண்டி பூங்காக்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் 3 நாட்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.