பொருளாதாரம் மோசமானாலும் பரவாயில்லை, எனக்கு மக்கள் தான் முக்கியம்: பிரதமர் மோடி
- IndiaGlitz, [Tuesday,March 24 2020]
நாட்டின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு என் நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா குறித்து இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘இந்தியா தற்போது கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக களமிறங்கி உள்ளது. இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து மார்ச் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். நாட்டு மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் நாம் மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும். கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தை விட மக்களின் உயிர்தான் எனக்கு முக்கியம். இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடையலாம். பெரும் பொருளாதார சரிவை நாடு சந்திக்கலாம். ஆனால் பரவாயில்லை, எனக்கு என் நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம். அடுத்த 21 நாட்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கடினமாக இருக்கும். அனைத்து குடும்பங்களுக்கும் 21 நாட்கள் மிக மோசமாக இருக்கும். ஆனால். இந்த 21 நாட்களை நாம் சரியாக பின்பற்றவில்லை என்றால், நாம் 21 வருடங்கள் பின்நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.