கொரோனா பீதியில், சாலையில் கிடந்த பணத்தைகூட கண்டு கொள்ளாத மக்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவல் உலக மக்களிடையே பல்வேறு சுகாதாரமான பழக்கங்களை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் உமிழ்நீர், சளி போன்றவற்றின் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பான சுகாதார முறைகளை மேற்கொள்ளுமாறு உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாது பொருட்களின் மீதும் கொரோனா வைரஸ் கிருமி தங்கியிருப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே பொருட்களின் மீது கிருமி நாசினிகளை தெளிப்பது, பொருட்களைத் தொட்டவுடன் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது போன்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அம்மாநில சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் பணத்தை ஒருவரும் எடுக்காமல் பல மணிநேரமாக அங்கேயே கிடந்திருக்கிறது. கொரோனா ஒட்டிக் கொண்டதால் யாராவது இதைத் தூக்கி எறிந்திருப்பார்கள் என நினைத்த மக்கள் இந்தப் பணத்தை அருகில் கூட சென்று பார்க்கவில்லை என்பது ஆச்சரியத்தை வரவழைத்து இருக்கிறது.
இந்த வதந்தி, பணத்தைத் தவறவிட்ட ஆட்டோ ஓட்டுநர் கஜேந்திரா ஷாவுக்கு நல்லதையே செய்திருக்கிறது. சாஹர்சா மாவட்டத்தை அடுத்த கோபா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான இவர் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அதிகாலையில் பஜாருக்கு சென்றிருக்கிறார். தனது பாக்கெட்டில் இருந்த புகையிலை பாக்கெட்டை எடுக்கும்போது தவறுதலாக பணம் சாலையில் விழுந்திருக்கிறது. எங்கே தொலைத்தோம் எனத் தெரியாமல் கஜேந்திரா ஷா தேடிக் கொண்டிருக்கும்போது வாட்ஸ் அப், பேஸ் புக் என பல சமூக வலைத்தளங்களில் சாலையில் கிடந்த நோட்டு பற்றிய தகவல்கள் உலா வந்தன.
இதையடுத்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததைக் கூறி கஜேந்திரா ஷா தனது பணத்தை திரும்ப பெற்றிருக்கிறார். கொரோனா பீதியில் மக்கள் மிகவும் நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஆட்டோ ஓட்டுநரின் 32 மாத உழைப்பு தொலைந்திருக்கும். கொரோனா ஒருவகையில் நல்லதையே செய்திருக்கிறது எனப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments