மார்க்கெட்டை மாற்றியும் மாறாத மக்கள்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்தான்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் பழங்கள் மற்றும் பூக்கள் மொத்த விலையிலும் சில்லறை விலையிலும் விற்பனை ஆகி வந்ததால் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனை அடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருந்ததால் பழங்கள் மற்றும் பூ விற்பனையை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றி சென்னை மாநகராட்சி சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று முதல் மாதவரம் பேருந்து நிலையத்தில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனையாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து மாதவரத்திற்கு மாற்றியும் அங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பூ, பழங்கள் வாங்க முண்டியடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் வாழைப் பழங்களையும் பூக்களையும் வாங்க பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடத்தை மாற்றியும் பொது மக்கள் திருந்தவில்லை என்றும் இன்னும் கொரோனா வைரஸின் வீரியம் குறித்து புரிந்து கொள்ளாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினர் என்னதான் கட்டுப்படுத்தினாலும் அதையும் மீறி பொதுமக்கள் பழங்களையும் பூக்களையும் முண்டியடித்துக்கொண்டு வாங்குவதால் கொரோனாவுக்கு பெரும் கொண்டாட்டமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியமான பொருட்களை மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி மற்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி வசனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்த அஜித்-விஜய் நாயகி

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது

ஒரே நாளில் 22, மொத்தம் 38: கொரோனாவை உற்பத்தி செய்யும் கோயம்பேடு மார்க்கெட் 

கோயம்பேடு மார்க்கெட் கொரோனாவை உற்பத்தி செய்யும் மார்க்கெட்டாக மாற வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை: மருத்துவ நிபுணர் குழு தகவல்

தமிழ்நாட்டில், ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு நியமித்துள்ள மருத்துவ ஆலோசனைக்குழு, தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரிஷிகபூரின் இறுதி சடங்கிற்காக 1400 கிமீ பயணம் செய்யும் மகள்!

உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமான பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் இறுதிசடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது மகள் டெல்லியில் இருந்து மும்பைக்கு 1,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளதாக

இதுவரை கொரோனா பாதிக்காத நாடுகள்!!!

உலகையே படாய்ப் படுத்திவரும் கொரோனா ஒருசில நாடுகளில் மட்டும் தலைக் காட்டவில்லை