மார்க்கெட்டை மாற்றியும் மாறாத மக்கள்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்தான்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் பழங்கள் மற்றும் பூக்கள் மொத்த விலையிலும் சில்லறை விலையிலும் விற்பனை ஆகி வந்ததால் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனை அடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருந்ததால் பழங்கள் மற்றும் பூ விற்பனையை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றி சென்னை மாநகராட்சி சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று முதல் மாதவரம் பேருந்து நிலையத்தில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனையாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து மாதவரத்திற்கு மாற்றியும் அங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பூ, பழங்கள் வாங்க முண்டியடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் வாழைப் பழங்களையும் பூக்களையும் வாங்க பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடத்தை மாற்றியும் பொது மக்கள் திருந்தவில்லை என்றும் இன்னும் கொரோனா வைரஸின் வீரியம் குறித்து புரிந்து கொள்ளாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினர் என்னதான் கட்டுப்படுத்தினாலும் அதையும் மீறி பொதுமக்கள் பழங்களையும் பூக்களையும் முண்டியடித்துக்கொண்டு வாங்குவதால் கொரோனாவுக்கு பெரும் கொண்டாட்டமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியமான பொருட்களை மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி மற்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று திறக்கப்படாமல் இருந்த மாதவரம் தற்காலிக பழ மற்றும் பூ சந்தை இன்று திறக்கப்பட்டது.
— Bala vetrivel ந (@vetrivel1996) May 1, 2020
ஏன் திறந்தார்கள் என்று கூட தோன்றுகிறது. சுய ஒழுக்கம் ஒன்றால் தான் கோரோனாவை வெல்ல முடியும்@rameshibn @SRajaJourno #Covid19Chennai #COVID2019india pic.twitter.com/mSZS3aYxTM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com