எகிப்து வெங்காயம் யாருக்கும் பிடிக்கல.. வருந்தும் வியாபாரிகள்.
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த சுமார் 40,000 டன் வெங்காயம் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வெங்காயத்தை மக்கள் விரும்பவில்லை எனவும், அதை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் வெங்காய வியாபாரிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
வழக்கமாக நாட்டு வெங்காயம் சிறிய அளவில் இருக்கும். ஒரு கிலோவுக்கு 10 முதல் 15 வெங்காயங்களை எடுக்க முடியும். பயன்பாட்டுக்கும் நன்றாக இருக்கும். ஆனால், நாட்டு வெங்காயத்தைவிட, எகிப்து வெங்காயம் அளவில் பெரியதாக இருக்கிறது. எடையிலும் ஒரு கிலோவுக்கு 5 முதல் 6 வெங்காயம் மட்டுமே நிற்கிறது. அதுமட்டுமல்லாமல், இதன் நிறமும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதை இந்திய மக்கள் விரும்பவில்லை.நாட்டு வெங்காயத்தில் இருக்கும் கருஞ்சிவப்பு நிற வெங்காய வகைகளை, அவ்வளவாக இந்திய மக்கள் சமையலில் சேர்ப்பதில்லை. விசேஷமாகத்தான் அந்த வெங்காய ரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, எகிப்து வெங்காயத்தின் நிறத்தையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும், நாட்டு வெங்காயத்தைவிட எகிப்து வெங்காயம் தரத்தில் குறைவாகவும், அதிக அளவு காரத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது" என வெங்காய வியாபாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
நாட்டு வெங்காயத்தின் விலையிலேயே எகிப்து வெங்காயமும் சந்தையில் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கிறது. மக்கள் வாங்குவது குறைவாக இருந்தாலும், மொத்த தேவைகளுக்காக வாங்கிச் செல்பவர்கள் எகிப்து வெங்காயத்தைத் தேர்வு செய்து வாங்குகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
arul sudha
Contact at support@indiaglitz.com
Comments