எகிப்து வெங்காயம் யாருக்கும் பிடிக்கல.. வருந்தும் வியாபாரிகள்.

  • IndiaGlitz, [Wednesday,December 11 2019]

வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த சுமார் 40,000 டன் வெங்காயம் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வெங்காயத்தை மக்கள் விரும்பவில்லை எனவும், அதை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் வெங்காய வியாபாரிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வழக்கமாக நாட்டு வெங்காயம் சிறிய அளவில் இருக்கும். ஒரு கிலோவுக்கு 10 முதல் 15 வெங்காயங்களை எடுக்க முடியும். பயன்பாட்டுக்கும் நன்றாக இருக்கும். ஆனால், நாட்டு வெங்காயத்தைவிட, எகிப்து வெங்காயம் அளவில் பெரியதாக இருக்கிறது. எடையிலும் ஒரு கிலோவுக்கு 5 முதல் 6 வெங்காயம் மட்டுமே நிற்கிறது. அதுமட்டுமல்லாமல், இதன் நிறமும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதை இந்திய மக்கள் விரும்பவில்லை.நாட்டு வெங்காயத்தில் இருக்கும் கருஞ்சிவப்பு நிற வெங்காய வகைகளை, அவ்வளவாக இந்திய மக்கள் சமையலில் சேர்ப்பதில்லை. விசேஷமாகத்தான் அந்த வெங்காய ரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, எகிப்து வெங்காயத்தின் நிறத்தையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும், நாட்டு வெங்காயத்தைவிட எகிப்து வெங்காயம் தரத்தில் குறைவாகவும், அதிக அளவு காரத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது என வெங்காய வியாபாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

நாட்டு வெங்காயத்தின் விலையிலேயே எகிப்து வெங்காயமும் சந்தையில் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கிறது. மக்கள் வாங்குவது குறைவாக இருந்தாலும், மொத்த தேவைகளுக்காக வாங்கிச் செல்பவர்கள் எகிப்து வெங்காயத்தைத் தேர்வு செய்து வாங்குகிறார்கள்.

 

More News

மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க..!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்

இந்த ஒரு நாளுக்காகத்தான் 25 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன்: புதுமாப்பிள்ளை சதீஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168' படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள்

விஷால் மீது சிம்பு தொடர்ந்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் என்பவர் தயாரித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' என்ற திரைப்படத்திற்காக சிம்புவுக்கு ரூபாய் 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும்,

இன்று முதல் தொடங்கும் 'பொன்னியின் செல்வன்': இரு முக்கிய நடிகர்கள் தாய்லாந்து விரைவு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு இன்று முதல்

"அவர்களின் எல்லா செயல்களிலும் அகங்காரம் மட்டுமே இருக்கிறது", பா.ஜ.க.வை சாடிய பி.சி.ஸ்ரீராம்

பா.ஜ.க அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டுள்ளார்.