வெள்ளிக்கிழமை என்றும் பாராமல் மீன் வாங்க குவிந்த கூட்டம்: கொரோனாவுக்குத்தான் கொண்டாட்டம்!

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொரோனா வைரசால் பலியாவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த நிலையிலும் இன்னும் அதன் சீரியசை புரிந்து கொள்ளாமல் பொதுமக்கள் பொறுப்பின்றி நடந்து கொள்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் கடந்த வாரம் சனிக்கிழமை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அதிலும் பலர் மாஸ்க் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்கியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது

இதனை அடுத்து தமிழக அரசு சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் மீன் மார்க்கெட் உள்பட இறைச்சி கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் வெள்ளிக்கிழமை அன்று மீன் உள்பட இறைச்சிகளை வாங்க மாட்டார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் அதையும் மீறி இன்று வெள்ளிக்கிழமை என்றும் பாராமல் காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டத்தைப் பார்க்கும்போது இன்னும் நம் மக்கள் திருந்தவில்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆகமொத்தம் கொரோனாவுக்கு சரியான கொண்டாட்டம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More News

நேற்று கொல்கத்தாவை துவம்சம் செய்த பிரித்விஷாவின் காதலியா இந்த நடிகை?

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா துவம்சம் செய்தார்

கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டும் பிரபல நடிகர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் படு மோசமான நிலையை இருக்கும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறி கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

தமிழ் பெண்ணின் மாஸ்க் ஸ்டைல பாருங்க… இளம் நடிகையின் அட்டகாசமான புகைப்படம் வைரல்!

தமிழில் ஆஸ்தான நடிகரான கமல்ஹாசனின் மூத்தமகள் நடிகை ஸ்ருதிஹாசன்.

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர்....! அதிரடி கைது...!

சென்னையில் ரெம்டெசிவர் மருந்தை  கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்து நிற்கிறோம்: ஏஜிஎஸ் உருக்கமான அறிக்கை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமான செய்தி அனைவரின் மனதிலும் இடியாய் இறங்கியது. தமிழ் திரையுலகமே