மக்களே உஷாரா இருங்க… இந்தவகை மாஸ்க் எதுக்கும் உதவாது!!! எச்சரிக்கும் மத்தியச் சுகாதாரத்துறை!!

 

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சமூக விலகல், தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் முகக்கவசம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மத்தியச் சுகாதாரத் துறை இதுவரை எந்த வரையறைகளையும் கொண்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சக்த்தின் சேவை மையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

தற்போது சந்தையில் கிடைக்கும் N95 மாஸ்க்குகளில் வால்வுகள் இருப்பதுபோன்றும் தயாரிக்கப்படுகின்றன. இது மருத்துவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி உருவாக்கப்படுவது. ஆனால் கொரோனா பெருந்தொற்றில் இருந்து இது முழுமையான பாதுகாப்பைத் தராது எனத் தற்போது மத்திய சுகாதாரத்து துறை அமைச்சகத்தின் சேவை மைய இயக்குநர் ராஜீவ் தெரிவித்து உள்ளார். வால்வுகளில் இருக்கும் ஓட்டை வழியாக கொரோனா வைரஸ் கிருமிகள் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் மாநில அரசுகள் பொது மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதங்கள் அனுப்பப் பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவால் சீரழிந்த கூட்டுக்குடும்பம்!!! 18 பேர் பாதிப்பு மற்றும் தொடரும் அவலம்!!!

மகாராஷ்டிர மாநிலம் பூனே அடுத்த பிரிம்பிஹான் என்ற பகுதியில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது

கந்தனுக்கு அரோகரோ: கந்தசஷ்டி விவகாரத்திற்கு குரல் கொடுத்த ரஜினி

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கள்ளப்புருஷனை விட்டுத்தராத 2வது மனைவி: கத்தியால் குத்திய கணவர்

சென்னையை சேர்ந்த ஒருவரின் இரண்டாவது மனைவி தனது கள்ள புருஷனை விட்டுத்தர முடியாது என பிடிவாதமாக இருந்ததால் அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வேலையை பாருங்கள்: கவிஞர் வைரமுத்துவின் ஆவேச விட்டால் பரபரப்பு 

கவியரசர் கவியரசு வைரமுத்து குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குவைத்தின் புதியச் சட்டத்திருத்தம்: இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுமா??? 

அமெரிக்கா தன் நாட்டில் உள்ள வேலை வாய்ப்புக்களை தனது மக்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி H-1B விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.