மக்களே உஷாரா இருங்க… இந்தவகை மாஸ்க் எதுக்கும் உதவாது!!! எச்சரிக்கும் மத்தியச் சுகாதாரத்துறை!!
- IndiaGlitz, [Wednesday,July 22 2020]
இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சமூக விலகல், தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் முகக்கவசம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மத்தியச் சுகாதாரத் துறை இதுவரை எந்த வரையறைகளையும் கொண்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சக்த்தின் சேவை மையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
தற்போது சந்தையில் கிடைக்கும் N95 மாஸ்க்குகளில் வால்வுகள் இருப்பதுபோன்றும் தயாரிக்கப்படுகின்றன. இது மருத்துவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி உருவாக்கப்படுவது. ஆனால் கொரோனா பெருந்தொற்றில் இருந்து இது முழுமையான பாதுகாப்பைத் தராது எனத் தற்போது மத்திய சுகாதாரத்து துறை அமைச்சகத்தின் சேவை மைய இயக்குநர் ராஜீவ் தெரிவித்து உள்ளார். வால்வுகளில் இருக்கும் ஓட்டை வழியாக கொரோனா வைரஸ் கிருமிகள் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் மாநில அரசுகள் பொது மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதங்கள் அனுப்பப் பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.