மெரீனாவுக்கு செல்ல தமிழக அரசு தடை: எத்தனை நாள் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பொங்கல் பண்டிகையையொட்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பொங்கல் தினத்தில் மெரீனா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் முடிந்த மறுநாளில் இருந்து வார விடுமுறை என்பதால் மெரீனா உள்பட சுற்றுலா தலங்களில் அதிக மக்கள் அதிகம் கூட வாய்ப்பிருப்பதாலும், காணும் பொங்கல் தினத்தில் மெரீனாவில் லட்சக்கணக்கானோர் கூட வாய்ப்பு இருப்பதாலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரீனா மட்டுமின்றி வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்காவிலும் மக்கள் கூட அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com