'பேட்ட' விஸ்வாசம் திரையிட்ட திரையரங்குகளுக்கு அபராதம்?
- IndiaGlitz, [Thursday,January 10 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகியிருந்தது
இந்த நிலையில் பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவது வழக்கம். ஆனால் எப்போதும் இல்லாத புதுமையாக இன்று அதிகாலை 1 மணி காட்சி சென்னையின் ஒருசில திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
உண்மையில் நாள் ஒன்றுக்கு வழக்கமான நாட்களில் 4 காட்சிகளிலும் திருவிழா நேரங்களில் 5 காட்சிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இன்று பல திரையரங்குகளில் 7 காட்சிகள் திரையிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் அனுமதியின்றி சிறப்பு காட்சிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திரையரங்கில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.