close
Choose your channels

'பீச்சாங்கை', 'உரு', 'தங்கரதம்' ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்கள்

Monday, June 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் ஐந்து படங்கள் வரை ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் வெளியான 'பீச்சாங்கை', 'உரு', 'தங்கரதம்' ஆகிய படங்களின் சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

வித்தியாசமான தலைப்பில் அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பீச்சாங்கை' திரைப்படம் சென்னையில் நல்ல ஓப்பனிங் வசூலை கொடுத்து படக்குழுவினர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படம் சென்னையில் 15 திரையரங்குகளில் 59 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.13,25,540 வசூல் செய்துள்ளது.

அதேபோல் தன்ஷிகா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திகில் படமான 'உரு' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 14 திரையரங்குகளில் 45 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.8,65,170 வசூல் செய்துள்ளது.

மேலும் கடந்த வாரம் வெளியான இன்னொரு திரைப்படமான 'தங்கரதம்' சென்னையில் 10 திரையரங்குகளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,77,380 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று படங்களுமே திரையரங்குகளில் சுமார் 80% பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment