பிரியாணி பில்லே 27 லட்சமா? கிரிக்கெட் வாரியத்திற்கு இப்படியும் ஒரு சோதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்காகச் சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் செய்த வேலைதான் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விளையாடுவதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்திருந்தது. இதையடுத்து நியூசிலாந்து வீரர்கள் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். அவர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள செரினா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக 5 எஸ்பிக்கள் மற்றும் 500 போலீசார் நியமிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பாதுகாப்புக்கு வந்த போலீசார் நியூசிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஓருரிரு நாட்களில் மட்டும் 27 லட்சத்துக்கு பிரியாணி சாப்பிட்டதாகத் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த லிஸ்டில் பிரியாணியைத் தவிர மற்ற சைட் டிஷ் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றும் உணவகம் தெரிவித்துள்ளது.
இதேபோல பாதுகாப்பு பணியில் கமேண்டோ படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினரும் இருந்ததாகவும் அவர்கள் சாப்பிட்ட பில் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் சாப்பிட்ட பிரியாணி பில்லே ரூ.27 லட்சமா என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சியடைந்து இருக்கிறது. மேலும் இந்தத் தொகை இதுவரை கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout