சரியா சொன்னீங்க விஜய்சேதுபதி: தேசிய விருது பெற்ற கலைஞர் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நேற்று தனது டுவிட்டரில் ”போய் வேற வேலைய இருந்தா பாருங்கடா” என்ற ஒரே ஒரு வரி ட்வீட் திரையுலகினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த டுவிட் இந்திய அளவில் நேற்று முழுவதும் டிரெண்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி பல திரையுலக பிரபலங்கள் விஜய்சேதுபதியின் துணிச்சலான இந்த ட்விட்டுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த டுவிட்டின் வரிகளை டைட்டிலாக கொண்டு விரைவில் ஒரு திரைப்படம் வெளி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவில் தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது
இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும் தேசிய விருது பெற்றவருமான பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதியின் இந்த டுவீட் குறித்து கருத்து தெரிவித்தபோது, ‘மிகச்சரியாக சொன்னீர்கள் விஜய் சேதுபதி’ என்று குறிப்பிட்டுள்ளார்
விஜய் சேதுபதி ’மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் அவர் மக்களின் மனதில் ஹீரோவாக பதிவாகி விட்டார் என்று என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
#VijaySethupathi
— pcsreeramISC (@pcsreeram) February 12, 2020
You said it, you said it right.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com