கற்பனை செய்ய முடியாத கருவி: 'குடியுரிமை கோலம்' குறித்து பிசி ஸ்ரீராம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளும் மாணவர்களும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை கல்லூரி மாணவிகள் சிலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போட்டதால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த கோல விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இன்று தமிழகம் முழுவதும் பல வீடுகளில் இந்த சட்டத்திற்கு எதிராக கோலம் போடப்பட்டு உள்ளது.
ஒரு அரசால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு கோலம் மூலம் எதிர்ப்பை தெரிவித்து வருவது உலகின் கவனத்தை திருப்பியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்த பிரபல இயக்குனர் பிசி ஸ்ரீராம் அவர்கள் ’இதுபோன்ற ஒரு விஷயத்தை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது. மக்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த கோலத்தை ஒரு கருவியை பயன்படுத்துவதை யாராலும் கற்பனை செய்யவே முடியாது. ஒவ்வொருவரின் மனதிலும் எவ்வளவு ஆழமாக இந்த விஷயம் பதிந்து உள்ளது என்பதையே இந்தக் கோலங்கள் காட்டுகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு வண்ணங்கள் வழங்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் இந்த வண்ண கோலங்களில் மறைந்துள்ள செய்தியை உலகமே அறிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
,#kolam
— pcsreeramISC (@pcsreeram) December 30, 2019
Never ever imagined kolam can used as tool of expression.. How deep it has gone in every ones mind .
The peoples. Movement cannot be given colors .whole world knows your hidden agenda.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments