கற்பனை செய்ய முடியாத கருவி: 'குடியுரிமை கோலம்' குறித்து பிசி ஸ்ரீராம் 

மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளும் மாணவர்களும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை கல்லூரி மாணவிகள் சிலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போட்டதால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த கோல விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இன்று தமிழகம் முழுவதும் பல வீடுகளில் இந்த சட்டத்திற்கு எதிராக கோலம் போடப்பட்டு உள்ளது.

ஒரு அரசால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு கோலம் மூலம் எதிர்ப்பை தெரிவித்து வருவது உலகின் கவனத்தை திருப்பியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்த பிரபல இயக்குனர் பிசி ஸ்ரீராம் அவர்கள் ’இதுபோன்ற ஒரு விஷயத்தை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது. மக்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த கோலத்தை ஒரு கருவியை பயன்படுத்துவதை யாராலும் கற்பனை செய்யவே முடியாது. ஒவ்வொருவரின் மனதிலும் எவ்வளவு ஆழமாக இந்த விஷயம் பதிந்து உள்ளது என்பதையே இந்தக் கோலங்கள் காட்டுகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு வண்ணங்கள் வழங்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் இந்த வண்ண கோலங்களில் மறைந்துள்ள செய்தியை உலகமே அறிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

More News

11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி!

கல்லூரி மாணவர் ஒருவரால் கர்ப்பமான 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல சின்னத்திரை நடிகை சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்!

பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம்

அஜித்துக்கு அழைப்பு விடுத்த டுவிட்டர்: ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித், தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட வரமாட்டார் என்பதும், அவருக்கு எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்பதும் தெரிந்ததே.

சென்னையில் கோலம் போட்ட 6 மாணவிகள் கைது: பெரும் பரபரப்பு

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை உள்பட தமிழக நகரங்களில்