கௌதம் மேனனுடன் முதல்முறையாக இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோலிவுட் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்திலும் பிஸியாக இருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிம்பு, திரிஷா நடித்த ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்ட கௌதம் மேனனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த நிலையில் கௌதம் மேனன் தற்போது ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’, ‘துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தை இயக்கவிருப்பதாகவும், சிம்புவுடன் இணைந்து ‘விண்ணை தாண்டி வருவாயோ 2’ படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் வெப்சீரீஸ் ஒன்றை இயக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. அமேசான் நிறுவனத்திற்காக கௌதம் மேனன் இயக்கும் இந்த வெப்சீரிஸில் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் இணைய உள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

லாக்டோன் முடிந்த பிறகு என்னுடைய அடுத்த ப்ராஜக்ட் கௌதம் மேனனுடன் இணைந்து செயல்படுவதுதான் என்றும், லாக்டவுன் நீண்ட விடுமுறைக்கு பின் பணிபுரியவுள்ள புரொஜக்ட் இது என்றும், விரைவில் கொரோனா முடிவுக்கு வந்து இந்த புரோஜக்ட் நல்லபடியாக தொடங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 20 வருடங்களாக கோலிவுட் திரையுலகில் இருக்கும் கௌதம் மேனன் முதல்முறையாக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.