விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய பி.சி.ஸ்ரீராம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஆரண்ய காண்டம்' இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படமான விஜய்சேதுபதியின் 'அநீதி கதைகள்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாததால் பி.சி.ஸ்ரீராம் ஒப்புக்கொண்ட மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பி.சி.ஸ்ரீராம் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக இருப்பதால் 'அநீதி கதைகள்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பி.சி.ஸ்ரீராமுக்கு பதிலாக 'விக்ரம் வேதா' ஒளிப்பதிவாளர் பி.எஸ்.விநோத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரியவருகிறது.
விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சத்யராஜ் நடராஜன் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout