ரம்யா பாண்டியனின் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்': பிசி ஸ்ரீராம் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் அரசில் மூர்த்தி என்பவர் இயக்கத்தில் உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியானது. இந்த படத்தை பல திரையுலக பிரமுகர்கள் பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரம்யா பாண்டியன் மற்றும் வாணிபோஜன் நடிப்பு மிக சிறப்பாக இருப்பதாகவும் அதே போல் நாயகன் நடிப்பு, அரிசில் கிருஷ்ணமூர்த்தியின் கதை சொல்லும் பாணி மற்றும் திரைக்கதை சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய பாராட்டு பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இந்த படத்தை பார்த்து தனது வாழ்த்தையும் பாராட்டையும் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். ’ஒரு எளிமையான கதையை மிகச் சிறப்பாக இயக்குனர் அரசில் மூர்த்தி அவர்கள் மனதில் பதியும்படி தெரிவித்துள்ளார். அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பல திரையுலக பிரமுகர்கள் இந்த படத்தில் குழுவினர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#RaameAandalumRaavaneAandalum
— pcsreeramISC (@pcsreeram) September 24, 2021
A simple story about the love for bull said with all love by director #Arizil Murthy
Congtats #Arizalmurthy and team .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments