மெர்சல்-ஜிஎஸ்டி பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் திரையுலக பிரபலங்கள்

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் தற்போது இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது. பாஜகவின் எதிர்ப்பையும் மிரட்டலையும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தட்டிக்கேட்டு 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு முழு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் கமல்ஹாசன் உள்பட திரையுலகினர்களும் 'மெர்சல்-ஜிஎஸ்டி பிரச்சனைக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்னும்சில பிரபலங்கள் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பதை இங்கே பார்ப்போம். 

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்: மெர்சல் மூலம் பேச்சு சுதந்திரத்தின் தொண்டை நசுக்கப்படுகிறது

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: விமர்சனத்தை தாங்கிக்கொள்ள இயலாத எவரும் அமைப்புகளிலோ அதிகாரத்திலோ இருக்க தகுதியற்றவர்கள்

நடிகர் அரவிந்தசாமி: வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் தற்போது மக்கள் அரசிடம் திருப்பி கேள்வி கேட்கின்றனர். அதில் என்ன தவறு இருக்கின்றது?

சிபி: இப்படியே போனால் ஒரு படத்தின் டிஸ்கஷனில் ஆளும்கட்சியின் அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்

ஆதவ் கண்ணதாசன்: இனிமே ஊமைப்படம் தான் எடுக்கணும். ஒரு படத்திற்கு இத்தனை எதிர்ப்பா? வாழ்க ஜனநாயகம்