சிம்பு-வெங்கட்பிரபு படத்தில் இணையும் இரண்டு மேதைகள்

  • IndiaGlitz, [Tuesday,July 03 2018]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'எஸ்டிஆர் அதிரடி வெங்கட்பிரபு ஆக்சன்' என்று இருக்கலாம் என்ற செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வார் என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. திரையுலகின் இந்த இரு மேதைகள் இந்த படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் இந்த படம் 'பில்லா' படத்தின் தொடர்ச்சி இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் 'கோவா', சரோஜா,' பார்ட்டி' போன்ற ஜாலியான படமும் இது இல்லையாம். முழுக்க முழுக்க சீரியஸான ஒரு ஆக்சன் த்ரில்லர் தான் இந்த படம் என்று கூறப்படுகிறது. அஜித்துக்கு ஒரு 'மங்காத்தா' போல் அவரது வெறித்தனமான ரசிகரான சிம்புவுக்கும் இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அரவிந்தசாமியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் பிசியாக உள்ளார்.

'இந்தியன் 2' படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் பணி, பிக்பாஸ் பணி ஆகியவற்றோடு தனது அடுத்தடுத்த படங்களின் பணிகளையும் கவனித்து வருகிறார்.

கமல் கண்டிப்புக்கு பின்னர் டோட்டலாக மாறிய பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியும் நித்யாவும் இடம்பெற்றுள்ளார்கள் என்ற செய்தி வெளிவந்ததுமே இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் செம ஃபைட் நடக்கும் என்பதே எல்லோருடைய கணிப்பாக இருந்தது.

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள்?

சீயான் விக்ரம் மகன் அறிமுகமாகும் 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்

பூணூலை குறைசொல்ல கமலுக்கு தகுதி இருக்கிறதா? பிராமணர் சங்கம் கேள்வி

'நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்' என்று கூறினார்.