ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்த பிசி ஸ்ரீராம்: ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே புகழ் பெற்றவர்கள் பட்டியலில் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் பிசி ஸ்ரீராம் ஆகிய இருவருக்கும் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’இந்த கொரோனா நேரத்தில் நம்முடைய வாழ்க்கை மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் பாடல்கள் மிக முக்கிய காரணம். ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் பாடல்களை இந்த லாக்டவுன் நேரத்தில் கேட்பதற்கு மிகவும் இதமாக இருக்கிறது. அவருக்கு எனது நன்றி’ என்று பிசி ஸ்ரீராம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஏ.ஆர் ரஹ்மானின் ரசிகர்கள் பிசி ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
பிசி ஸ்ரீராம் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகிய இருவரும் ’திருடா திருடா’ ’மே மாதம்’ ’காதலர் தினம்’ ’அலைபாயுதே’ ’வரலாறு’ போன்ற படங்களில் இணைந்து பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Listening to @arrahman during these lockdown days is lifesaver.Thank u @arrahman your songs during these lockdown days Played an important in our lives.
— pcsreeramISC (@pcsreeram) August 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com