விஜய்க்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை: பழ கருப்பையா
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் உள்பட நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை என்று ‘சர்கார்’ படத்தில் நடித்தவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான பழ கருப்பையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எல்லா நடிகர்களுக்கும் அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் இருக்கின்றது. அதில் எந்த தவறும் இல்லை. முதல்வர் ஆசை அவர்களுக்கு வந்தாலும் தவறு இல்லை. ஏனெனில் அவர்கள் நடிகர்களாக இருப்பதால் அவர்கள் கூறும் கருத்து எளிதில் மக்களிடம் போய் சேருகிறது.
ஆனால் அதே நேரத்தில் நடிகர்களின் பேச்சை பெரிதுபடுத்துவது மீடியாக்கள்தான். சூர்யா ஒன்று சொல்கிறார், விஜய் ஒன்று சொல்கிறார், ரஜினி ஒன்று சொல்கிறார் இவ்வாறு நடிகர்கள் சொல்லும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரபரப்பு ஆவதற்கு காரணம் பத்திரிகைகள் தான். அவர்கள் சொல்வதை பத்திரிகையாளர்கள் பெரிது படுத்தி அவர்களுடைய பேச்சை விவாதம் நடத்தி மீடியாக்கள் தான் பெரிதுபடுத்துவதால் பரபரப்பு ஏற்படுகிறது.
நடிகராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி அரசியல் கட்சி தொடங்கினால் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஒரு கட்சியின் கொள்கையை கடைசி மனிதர் வரை கொண்டு செல்வதற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும். எம்ஜிஆர் இதனை சரியாக செய்தார். 1972ல் கட்சி தொடங்கி 1977ல் தான் ஆட்சியை பிடித்தார். எம்ஜிஆரை தற்போதுள்ள நடிகர்கள் யாரும் பின்பற்றுவதில்லை.
ஒரு கட்சியை தொடங்கி ஆறு மாதத்தில் தனது கொள்கைகளை மக்களிடம் போய் சேர்த்து விடலாம் என்று ரஜினி நினைப்பது தவறானது ஆகும். ஆறு மாதத்தில் ஒரு கட்சியின் கொள்கைகளை கடைசியில் உள்ள மனிதன் வரைக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியாது. குறைந்தது நான்கு அல்லது ஐந்து வருடங்கள் எம்ஜிஆர் போல் செய்தால்தான் வெற்றி கிடைக்கும். ரஜினி ஆரம்பத்திலேயே தவறு செய்கிறார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது என்றும் பழ கருப்பையா அந்த பேட்டியில் மேலும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments