விஜய்யால் இந்த அரசை அசைக்க முடியும்: பழ. கருப்பையா

  • IndiaGlitz, [Thursday,November 08 2018]

விஜய்க்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவரால் இந்த அரசை அசைக்க முடியும் என திமுக பிரமுகரும், 'சர்கார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான பழ.கருப்பையா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்கள் குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவு படுத்தும் வகையில் அவதூறு காட்சிகள் இருப்பதாகவும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 'சர்கார்' ஓடும் திரையரங்குகள் முன் ஆர்ப்பாட்டம், பேனர் கிழிப்பு என போராட்டம் முற்றி வருவதால் ஒருசில இடங்களில் இன்றைய காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பழ.கருப்பையா, 'விஜய்க்கு இன்றைக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவரால் இந்த அரசை அசைக்க முடியும் முடியும் என்றும், இந்த படத்தில் வரலட்சுமி கேரக்டருக்கு கோமளவள்ளி என்று இல்லாமல் ஜெயலலிதா என்று பெயர் வைத்திருந்தாலும் கூட என்ன தவறு இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த படத்தை அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பதால், 'பாகுபலி' போல பிரமாண்டமான வெற்றியை நோக்கி இந்த படம் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் 89 எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள பழ.கருப்பையாவின் கட்சியாலேயே அதிமுக அரசை அசைக்க முடியாத நிலையில் விஜய்யால் எப்படி இந்த அரசை அசைக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

More News

'சர்கார்' படத்திற்கு பாமகவும் எதிர்ப்பு: ஆனால்..வேற காரணம்!

விஜய் நடித்த 'சர்கார்' படத்தை திமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் சர்கார் படத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்

அதிமுகவினர் போராட்டம் எதிரொலி: சர்கார் படக்குழு எடுத்த அதிரடி முடிவு

'அதிமுக நடத்தும் போராட்டம் குறித்தும் தயாரிப்பு தரப்பிடம் விளக்கியதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

'சர்கார்' படத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்திற்கு அதிமுகவினர்களின் எதிர்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஒருசில திரையரங்குகளில் சர்கார்' காட்சிகள் ரத்து செய்யும் அளவுக்கு போராட்டம் வலுத்து வருவதால்

மதுரையை அடுத்து கோவையிலும் 'சர்கார்; படத்தை எதிர்த்து போராட்டம்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் ஏற்கனவே ஓப்பனிங் வசூலில் சாதனை செய்துள்ள நிலையில் இந்த படத்தின் வசூல், 'மெர்சல்' வசூல் சாதனையை முறியடிக்க தமிழக அரசியல்வாதிகள் உதவி செய்து கொண்டு வருகின்றனர்.

அதிமுகவினர் போராட்டம் எதிரொலி: சர்கார் காட்சிகள் ரத்து

மதுரையில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிப்பிரியா காம்ப்ளக்ஸ் முன் இன்று மதியம் அதிமுக பிரமுகர் ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.