கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பழம்பெரும் அரசியல்வாதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழம்பெரும் அரசியல்வாதியும் விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் நடித்த பழ கருப்பையா அவர்கள் இணைந்துள்ளார். மேலும் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
திமுக அதிமுக உள்பட பல கட்சிகளில் பயணம் செய்த பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா சற்று முன்னர் கமல்ஹாசன் கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பழ கருப்பையா அவர்கள் ’ஐம்பது ஆண்டுகாலமாக காமராஜர் தொடங்கி அதிமுக திமுக என மாறி மாறி அரசியல் செய்த நிலையில் மக்கள் நீதி மையம் என்ற நீதியான கட்சியில் நான் இணைந்துள்ளது பெருமைக்குரியதாக இருக்கிறது
தற்போது வளர்ச்சித் திட்டங்கள் நடந்து வந்தாலும் 40 சதவீதம் வளர்ச்சி திட்டங்களுக்கான பணம் ஊழலாக மாறி ஒரு சிலர் கைகளுக்கு போகிறது. இனிமேல் அது முழுவதுமாக மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் இணைந்ததற்கும் என்னை அவர் வரவேற்றதற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள்... #சீரமைப்போம்_தமிழகத்தை #தலைநிமிரட்டும்தமிழகம் #கமல்ஆளட்டும்தமிழகம்_மீளட்டும் #மக்கள்மனதில்மநீம https://t.co/0VjdhvFTWc
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments