திமுகவில் இருந்து திடீரென விலகிய 'சர்கார்' பட நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் அரசியல்வாதியும் இலக்கியவாதியும் சர்க்கார் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்தவருமான பழ கருப்பையா இன்று திமுகவில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியே வந்து, அன்றைய திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் பழ.கருப்பையா இணைந்தார். இந்த இணைப்பு மிகச்சிறப்பாக அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இணைந்த போதிலும் அவர் திமுகவுக்காக பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திமுகவின் திராவிட கொள்கை குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவர் விரைவில் திமுகவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அவர் திமுகவில் இருந்து விலகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய இருவரின் அரசியலை கடுமையாக விமர்சனம் செய்துள்ள கருப்பையா அவர்களுடைய கட்சிகள் இணைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. திமுகவில் இருந்து விலகி உள்ள பழ கருப்பையா தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout