close
Choose your channels

காகித தாளில் உடை: பிரபல நடிகையின் அட்டகாசம்

Thursday, April 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒருபக்கம் ஏழை எளிய மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சினிமா நட்சத்திரங்கள் ஜாலியான நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு தங்கள் ரசிகர்களை குஷிப்படுத்த வருகின்றனர். ஒரு சிலர் எல்லைமீறி ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரபல பாலிவுட் நடிகை பயல்ராஜ்புத் என்பவர் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் காகிதத்தால் செய்யப்பட்ட உடையை அணிந்து அதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஆதரவு மற்றும் கண்டனம் தெரிவித்து கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவு செய்துவருகின்றனர். கொரோனா வைரஸ் காலத்தில் பிரபல நட்சத்திரங்கள் உருப்படியான விஷயங்களை பொதுமக்களுக்கு கூறலாம் என்றும் இதுபோன்ற கவர்ச்சியான, ஆபாசமான புகைப்படங்கள் பதிவு செய்ததை தவிர்க்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர். இருப்பினும் இந்த காகித உடை புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment