ஓபன் சட்டையில் கேஷுவல் மேக்கப்… படு கிளாமர் புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை!

நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் “ஏஞ்சல்“ திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் நடிகை பாயல் ராஜ்புத். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் கடந்த 2018 இல் “வீரிய கி வெட்டிங்“ எனும் இந்தி சினிமா மூலம் பாலிவுட் ரசிகர்களிடையே பிரபலமானார் .

அதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் “ஆர்எக்ஸ் 100“ திரைப்படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் தென்னிந்திய ரசிகர்களிடையே தனிக்கவனத்தைப் பெற்றார். தற்போது தமிழில் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுடன் “ஏஞ்சல்“ திரைப்படத்திலும் இயக்குநர் பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகர் சிவா நடிப்பில் உருவாகிவரும் “கோல்மால்“ திரைப்படத்திலும் இவர் நடித்துவருகிறார்.

மேலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், அவ்வபோது தனது போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டணை திறந்துவிட்டு நடிகை பாயல் ராஜ்புத் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்குகளையும் இந்தப் புகைப்படம் குவித்திருக்கிறது.