பிரபல நடிகரின் முன்னாள் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாணிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவிக்கு பவன்கல்யாண் ரசிகர்கள் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோலிவுட்டின் பவர்ஸ்டார் பவன்கல்யாண் கடந்த 2012ஆம் ஆண்டு தனது மனைவி ரேணு தேசாயை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அகிரா, ஆத்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பின் பவன்கல்யாண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பவன்கல்யாணிடம் இருந்து விவாகரத்து பெற்ற ரேணு தேசாயும் தற்போது மறுமணம் செய்ய முடிவு செய்துள்ளார். சமீபத்தில் இவருடைய மறுமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பவன்கல்யாண் ரசிகர்கள், ரேணு மறுமணம் செய்யக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளனர். உங்களுக்கு ஏன் இன்னொரு திருமணம்? என்றும், எங்கள் கடவுளை காயப்படுத்தி மறுமணம் செய்ய வேண்டாம் என்றும் மீறி திருமணம் செய்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் சமூக வலைத்த்தளம் மூலம் பவன்கல்யாண் ரசிகர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout