மறுவெளியீட்டிற்கே இந்த அக்கப்போரா? திரையரங்கில் தீ வைத்து கொண்டாடிய ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Friday,February 09 2024]

பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான பிரபல நடிகரின் திரைப்படம் ஒன்று மறு ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தினத்தில் ரசிகர்கள் தியேட்டரில் தீ வைத்து அந்த தீயைச் சுற்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல நடிகர்களின் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியின் போது செய்யும் அட்டகாசங்கள் பெரிய அளவில் உள்ளது. அன்னதானம் உள்பட ஒருசில நல்ல விஷயங்கள் செய்தாலும், பெரிய பெரிய கட்-அவுட்டுக்கள், பாலாபிஷேகம் உள்ளிட்ட சில நிகழ்வுகள் வெறுப்பை வரவைக்கிறது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவான ’கேமராமேன் கங்கா டு ராம்பாபு’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.

பவன் கல்யாண் ஜோடியாக தமன்னா நடித்த இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கிய நிலையில் இந்த படத்தை பார்க்க வந்த பவன் கல்யாண் ரசிகர்கள் தியேட்டரில் ஸ்கிரீன் அருகே தீ வைத்து அந்த தீயைச் சுற்றி நடனமாடிய கட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே நேற்று ஹைதராபாத்தில் ’யாத்ரா 2’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் அந்த படத்தை பார்க்க வந்த பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்களுக்கு இடையே சண்டை நடந்ததை அடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.