இரண்டு மாநிலங்களுக்கு தலா ரூ.50 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்

எந்த ஒரு இயற்கை பேரிடர் வரும்போதும், பொது மக்களுக்கு உதவி செய்வதில் திரையுலக பிரபலங்கள் தான் முதல் நபராக இருப்பார்கள் என்பதை பல உதாரணங்களில் இருந்து நாம் பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரபல நடிகர் நடிகைகள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்

பெப்சி சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்பட பல நடிகர்கள் லட்சக் கணக்கில் நிதி உதவி செய்துள்ளதும், ஒரு சிலர் அரிசி மூட்டைகளை கொடுத்து உதவி செய்து வருவதும் குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில முதலமைச்சர் நிவாரண நிதியாக தலா ரூபாய் 50 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். இரு மாநிலங்களுக்கும் அவர் செய்துள்ள இந்த உதவியை சரியான நேரத்தில் செய்யப்பட்ட பேருதவியாக கருதப்படுகிறது. இதேபோல் மற்ற தெலுங்கு நடிகர்களும் விரைவில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிகமான நிதியை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை பேரிடர்களின் ஒன்றான கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் சக மனிதர்களுக்காக உதவிசெய்யும் திரையுலக பிரபலங்களை மனதார பாராட்டுவோம்

More News

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பு அரிசி: பிரபல கிரிக்கெட் வீரர் அறிவிப்பு 

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நேற்று முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது

ஸ்பெயின் துணை பிரதமருக்கு கொரோனா: சீனாவை முந்திய சோகம்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும் சீனாவில் தற்போது அந்த வைரஸ் கட்டுக்குள் அடங்கியுள்ளது., கடந்த சில நாட்களாக சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

அமைச்சர் விஜயபாஸ்கரை வித்தியாசமாக பாராட்டிய பார்த்திபன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் எடுத்த முன்னெச்சரிக்கை அதிரடி நடவடிக்கைகளால்

கொரோனா விவகாரம்: பிரகாஷ்ராஜ் செய்த பிரமாதமான செயல்

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளே ஏழை எளியவர்களின் வீடுகளில் அடுப்பு எரியாமல் பட்டினி

கொரோனா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய குட் நியூஸ்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அதிரடி நடவடிக்கையாலும்,