close
Choose your channels

முன்னாள் மனைவியின் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்

Tuesday, June 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவர்ஸ்டார் பவன்கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் விரைவில் மறுமணம் செய்யவுள்ளார் என்பதையும் இதனையடுத்து பவன்கல்யாண் ரசிகர்கள் ரேணுவுக்கு சமூக வலைத்தளம் மூலம் மிரட்டல் விடுத்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது முன்னாள் மனைவி ரேணுவின் புதிய வாழ்க்கைக்கு பவன்கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, 'செல்வி ரேணு அவர்களின் புதிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். அவர் அனைத்து நலன்களும் பெற்று வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்று தனக்கு வந்த மிரட்டல்கள் குறித்து கருத்து கூறிய ரேணு தேசாய், 'மிரட்டல் விடுத்த நபர்கள் எப்படி தாயார் மற்றும் சகோதரிகளுடன் வாழ்கின்றார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர்களுடைய மனநிலையை நினைத்து உண்மையில் நான் கவலைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment