தமிழகத்தின் நிரந்தர முதல்வர் நீங்கள் தான்: எடப்பாடியாருக்கு நடிகர்-அரசியல்வாதி வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட தமிழக பிரபலங்கள் பலரும் முதல்வருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் மேலும் கூறியதாவது:
தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
ஐயா வணக்கம் புரட்சித் தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதாவின் நல்லாட்சியை தொடர்ந்து நடத்தி வரும் நீங்கள் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளீர்கள். அ.தி.மு.கவின் தொண்டனாக தங்களின் வாழ்க்கையை தொடங்கி பல பொறுப்புகளை வகித்துள்ளீர்கள். குறிப்பாக நான்கு முறை சட்டமன்றத்திற்கும் ஒரு முறை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யபட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளீர்கள்.
இன்று தமிழக முதல்வராக ஏழை எளிய மக்கள் குறிப்பாக விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறீர்கள். உங்களின் இந்த பிறந்த நாளில் என்றும் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும் என்று என்னுடைய ஜனசேனா கட்சியின் சார்ப்பாக வாழ்த்துகிறேன்.இவ்வாறு நடிகர் பவன்கல்யாண் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு உறைவிடம் வழங்க வேண்டும் என்றும் பின்னர் அவர்களை பத்திரமாக சொந்த மாநிலத்திற்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பவன்கல்யாண் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை உடனடியாக முதல்வர் பழனிச்சாமி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
*தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!* ??@CMOTamilNadu pic.twitter.com/Ij2h60KGpG
— Pawan Kalyan (@PawanKalyan) May 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com