பவித்ரா ஜெயராமனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல கன்னட சீரியல் நடிகை பவித்ரா ஜெயராமன் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒருவரும் பவித்ராவின் மறைவை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகையான பவித்ரா ஜெயராமன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில் பவித்ரா மரணத்தால் மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. பவித்ரா ஜெயராமன் ஏற்கனவே திருமணம் ஆகி தனது கணவரை பிரிந்து வாழும் நிலையில் சந்திரகாந்த் உடன் அவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பவித்ரா ஜெயராமன் மறைவால் மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அடுத்தடுத்து சில நாட்களில் பவித்ரா ஜெயராமன் மற்றும் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சந்திரகாந்த் இருவரும் மரணம் அடைந்தது சின்னத்திரை உலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

நடிகர் சிவகுமார் செய்த நெகிழ்ச்சியான செயல்.. ராதிகா சரத்குமார் வெளியிட்ட வீடியோ..!

பழம்பெரும் நடிகர் சிவகுமார் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்த வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் கமல்.. கூடவே இன்னொரு பிரபலம்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்தது.

வெற்றிமாறன் அடுத்த படத்தில் கவின்.. டைட்டில் இதுதான்.. நெகட்டிவ் கேரக்டரில் பிரபல நடிகை..!

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் கவின் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே

விஜய்சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் .. மாஸ் வீடியோ ரிலீஸ்..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று நேற்றே அறிவிப்பு வெளியான நிலையில் சற்று முன்னர் டைட்டில் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தில் கேமியோ கேரக்டரில் பிரபல நடிகர்.. வேற லெவல் தகவல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் சமீபத்தில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு மாஸ் நடிகரும்  கேமியோ   கேரக்டரில் இணைவதாக கூறப்படுகிறது.