அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. மேனேஜரை மாற்றிய பிக்பாஸ்.. என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில், பவித்ரா ஜனனி மேனேஜராக இருந்து வரும் நிலையில், அவரை மாற்ற வேண்டும் என்ற அடுக்கடுக்கான புகார்கள் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 16-வது நாளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய டாஸ்க்கில் பவித்ரா ஜனனி மேனேஜராக உள்ளார் என தெரிகிறது.
இந்த நிலையில், மேனேஜர் குறித்து புகார்களை கரும்பலகையில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான புகார்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து, பிக் பாஸ் மேனேஜர் மீது அதிக புகார்கள் இருப்பதாக கூறுகிறார்.
அப்போது விஜே விஷால் ’முட்டையை கேட்ட போது, மேனேஜர் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்’ என்று கூறினார். அதே போல, தீபக் ’பதில் கொடுக்கும் போது கடுமையாக நடந்து கொள்கிறார்கள், பின்னர் மாற்றிக் கொள்கிறார்கள்’ என்று கூறினார். அதேபோல், அருண் ’காலில் இருக்கிற பிரஷை எடுத்து என் கையில் கரகர என்று தேய்த்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்.
இதனை அடுத்து, மேனேஜர் இடமாற்றம் செய்யப்படுகிறார் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில், பவித்ரா ஜனனி சக போட்டியாளர்களிடம் பேசும்போது, "அவர்களுக்கு மோட்டிவ் மேனேஜரை மாற்ற வேண்டும் என்பதுதான்" என்று அழுதுகொண்டே கூற, மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது.
#Day16 #Promo4 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 22, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/JPNXZOEcvU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com