குக் வித் கோமாளி: இன்று எலிமினேட் ஆனவர் இவர்தான்!

விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வாரம் விஜய் டிவியில் உள்ள பிரபலங்களின் கெட்டப்பில் கோமாளிகள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் இன்று எலிமினேஷன் செய்யப்பட்டவர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

பாபா பாஸ்கர் ஏற்கனவே கடந்த வாரம் இம்யூனிட்டி பெற்று விட்டதால் அவர் இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனை அடுத்து ஷகிலா, அஸ்வின், பவித்ரா மற்றும் கனி ஆகிய நால்வரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட வேண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது அஸ்வின் அல்லது பவித்ரா என்ற நிலை இருந்தது என்பதும் இறுதியில் பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டதை அடுத்து கோமாளி புகழ் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பதும், அஸ்வினின் கோமாளியான ஷிவானி நிம்மதி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் பாபா பாஸ்கரையும் சேர்த்து நான்கு கோமாளிகள் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.