டின்னு சொல்லாதேன்னா சொல்லாதே.. ஆர்ஜே விஷாலிடம் ஆவேசமான பவித்ரா..
- IndiaGlitz, [Wednesday,October 09 2024]
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து விறுவிறுப்பாகும் என்ற நிலையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாகி உள்ளது என்பதும் போட்டியாளர்கள் மத்தியில் கருத்து மோதல், சண்டை சச்சரவு ஆகியவை சில மணி நேரத்திற்கு ஒரு முறை ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று வெளியான முதல் புரமோவில் பவித்ராவை விஜே விஷால் டி என்று கூப்பிட உடனே ஆவேசமான பவித்ரா’ டி போட்டு சொல்லாதே என்றால் சொல்லாதே, அது எனக்கு பிடிக்காது’ என்று சொல்கிறார்.
நான் எல்லோரையும் அப்படித்தான் சொல்லுவேன் என்று விஜே விஷால் சொல்ல, ‘நீ யாரை வேண்டுமானாலும் அப்படி சொல்லிக் கொள், ஆனால் என்னைய டி போட்டு சொல்லாதே’ என்று கூற ’நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எனக்கு சொல்லாதே’ என்று மீண்டும் பவித்ரா ஆவேசம் அடைகிறார்.
இதனை அடுத்து வார்த்தையை விடக்கூடாது என்று விஷாலுக்கு சக போட்டியாளர்கள் அறிவுரை கூறி அவரை அழைத்துச் செல்கின்றனர். பவித்ராவும் ஆவேசமாக பேசிய நிலையில் இருவருக்கும் இடையே நடந்த சண்டை இன்று பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
#Day3 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 9, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/FAmsBNzo14