பிக்பாஸ் அமீர் பிறந்தநாள்.. உருகி உருகி வாழ்த்து தெரிவித்த பாவனி ரெட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் நிறுவனம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படும் நிலையில் இன்று அமீரின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து பாவனி ரெட்டி உருகி உருகி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடன இயக்குனர் அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் கலந்து கொண்டதை அடுத்து பாவனியை அமீர் ஒருதலையாக காதலித்தார். ஒரு கட்டத்தில் அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்ட நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்து வருகின்றனர்
இந்த நிலையில் அமீர் - பாவனி விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை அமீர் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அமீர் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு உருகி உருகி தனது பிறந்தநாள் வாழ்த்து க்களை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
எனது ஒரே ஒரு சூப்பர் மேன், எனது வலிமையான அயர்ன்மேன், என் ஹீரோ, என் அழகானவர், எனது உலகத்தை முழுமைப்படுத்தும் இவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒன்றாக சிரிக்கவும் ஒன்றாக வாழவும் இதோ இன்னொரு வருடம்.
பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு நீ என்னை உணர வைக்கும் அன்பை யாராலும் ஒப்பிட முடியாது. நான் உங்களுடன் இருக்கும்போது முழு மகிழ்ச்சியை உணர்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். பாவனிரெட்டியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments