கணவர் மறைவுக்கு பின் வேறு காதலா? பிக்பாஸ் பாவனி ரெட்டியின் சகோதரியின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி சமீபத்தில் தனது உருக்கமான கதையைக் கூறினார் என்பதும் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டபோது தான் அழவில்லை என்றும் என்னை விட்டு விட்டு அவர் போய் விட்டார் என்ற கோபம்தான் ஏற்பட்டது என்றும் கூறியது போல் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் உருக வைத்தது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் பாவனி ரெட்டி குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்து அவருடைய மூத்த சகோதரி தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் சிந்து, பாவனி ரெட்டியின் மூத்த சகோதரி. பாவனி பற்றியும் அவள் உறவுகளைப் பற்றியும் சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி செய்திகளையும் சர்ச்சைகளையும் தெளிவுபடுத்தி விளக்க விரும்புகிறேன்.
அவளது கணவர் பிரதீப்குமார் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளவில்லை. அவள் கணவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்தாள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியராக்த் தான் இருந்தனர். அவர் மறைவிற்குப் பிறகும் அவர் நினைவுகளை அவளை விட்டு நீங்கவில்லை. அவருடன் அவர் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு என்றென்றும் பசுமையான நினைவுகளை கொண்டிருந்தது.
ஆனால் சமீபகாலமாக வேறு ஒருவரை விரும்பினாள். நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்கையை அமைத்து தர விரும்பினோம். ஆனால் சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்தனர் அவள் கடந்த நான்கு வருடங்களாக தனது கணவரின் மறைவிற்குப் பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக, தைரியமாக வாழ கற்றுக்கொண்டாள். தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார். எனவே அனைத்து ஊடக பணியாளர்களும் ரசிகர்களும் மற்றும் அவளுடைய நலன் விரும்பிகளும் அவருடைய உணர்வுகளையும் தனிநபர் உரிமைகளையும் மதித்து அவளின் இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் அளிக்குமாறு நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout