மீண்டும் அபிநய் பிரச்சனையை இழுக்கும் பாவனி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இறுதிகட்டத்தில் சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவர் உள்ளனர் என்பதும் இதில் ஒருவர் டிக்கெட் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த டாஸ்க்கின் அடுத்தகட்டமாக போட்டியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறுதிகட்டத்தில் இருக்கும் மூவர் பதில் சொல்ல வேண்டும் என்ற நிலை வருகிறது. அதில் ஒரு கேள்வியைக் கேட்கும் பாவனி, ’அபினய் விஷயத்தில் பாவனியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த போட்டியில் வெற்றி பெரும் ஒரு யுக்தியாக கையாண்டாரா? என்று கேட்கப்படுகிறது.
இதற்கு உங்களது பதில் என்ன என்று அமீரை பிக்பாஸ் கேட்கும் போது அதை ஒப்புக் கொள்வது போல் அமீர் பச்சை நிற லைட்டை காண்பிக்கிறார். இதனால் பாவனியை அவர் இந்த போட்டியில் வெற்றி பெற ஒரு யுக்தியாக பயன்படுத்தியதை ஒப்புக்கொள்கிறாரா? அல்லது வேறு கேள்விக்கு அவர் பதில் கூறியதை எடிட்டர் தனது திறமையால் எடிட் செய்தாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் பார்க்க வேண்டும்.
#Day88 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/Q851Bz3cVb
— Vijay Television (@vijaytelevision) December 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments