அஜித்தின் 'வலிமை'யில் இணைந்த தனுஷ், கார்த்தி பட நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,December 29 2019]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையிலுள்ள ரேகா கார்டர்னில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி மற்றும் தனுஷ் படத்தில் நடித்த ஒரு நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். கார்த்தி நடித்த ’மெட்ராஸ்’ மற்றும் தனுஷ் நடித்த ’வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்த பவல் நவகீதன் என்ற நடிகர் ’வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் பட்டியலை விரைவில் படகுழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.