பாலியல் தொல்லை....!திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் கைது...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பிஷப் கல்லூரி பேராசிரியர், பால் சந்திரமோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி பிஷ்ப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருப்பவர் தான் பால் சந்திர மோகன். இவன் வகுப்பில் மாணவிகளிடம் நெருக்கமாக அமர்ந்து இரட்டை அர்த்தத்திலும், கொச்சையாக பேசுவதையுமே வழக்கமாக வைத்துள்ளான். வகுப்பில் குறைந்த அளவில் மாணவிகள் இருந்தால், தனது அறைக்கு மாணவிகளை தனியாக வரச்சொல்லி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான் . இதே துறையில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கும் நளினி என்பவர், மாணவிகளிடம், "எச்.ஓ.டியை பார்க்க செல்லும் போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டுதான் செல்ல வேண்டும்" என்று வற்புறுத்தியுள்ளார். மேலும் பல பெண்களிடம் அத்துமீறி பாலியல் சேட்டைகள் செய்துள்ளான். இதற்கு அடுத்தகட்டமாக "சட்டை மற்றும் பேண்ட்-ஐ தளர்த்தி, பல பாலியல் செய்கைகளை செய்துள்ளதால், வகுப்பறையில் நாங்கள் தலைகுனிந்தே இருப்போம்" என மாணவிகள் திருச்சி காவல் ஆணையரிடத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தனர். மேலும் பேராசிரியர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் தொல்லைகளால் தாங்கள் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாக, அந்தப்புகாரில் கூறப்பட்டிருந்தது.
பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தும், அவருக்கு உதவிய பேராசிரியை நளினி மீதும் மகளீர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் கீழ் வக்கீல் ஜெயந்தி ராணி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, பால் சந்திரமோகன், நளினியிடம் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை கல்லூரி நிர்வாகத்திடம் தாக்கல் செய்தனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்தார். இனி இதுபோல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க குழுவை நியமிப்பதாகவும், கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் பால் சந்திரமோகனை இன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சியில் உள்ள மத்திய சிறையில் மாலைக்குள் அடைக்கப்படுவார் என்றும் செய்திகள் கூறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout